தமிழ் சினிமாவில் வில்லன் காமெடியன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர்தான் காளிதாஸ். இவர் டப்பிங் கலைஞரும் கூட. அதுமட்டுமல்லாமல் இவர் வடிவேலு கூட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
சுமார் மூவாயிரம் படங்களுக்கு மேலாக டப்பிங் பேசியிருக்கிறார். இதனை தொடர்ந்து தற்போது வெளியாக உள்ள கே ஜி எஃப் 2 படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசி இருக்கிறாராம்.
இவருக்கு சில காலங்களாக ரத்த கோளாறு பிரச்சனை உள்ளதால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் கடந்த ஒரு சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவரின் உடல்நிலை மிகவும் மோசமானது.
இதனால் இவரின் ரத்தத்தை மாற்ற வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். அதன்படி ரத்தத்தை மாற்றியும் எந்த ஒரு பலனும் இல்லாமல் ஆகஸ்ட் 12ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறுதி ஊர்வலம் இன்று நடைபெறுகிறது.
அதற்கு முன்பாகவே காளிதாசன் மனைவி வசந்தா மறைந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் பார்கவி சினிமா துறையில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
காளிதாஸ் மரணத்தின் செய்தியை அறிந்த ரசிகர்கள் அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.