poove unakkaga sangeetha : நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் “எல்லாமே என் ராசாவே” என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இவரை பார்த்தால் பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் அந்த அளவு சுட்டித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். சினிமாவில் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக தான் அறிமுகமானார்.
பிறகு கதாநாயகியாக நடித்து பல ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார் பின்பு தான் நடித்த திரைப்படத்தில் ஒளிபதிவாளராக பணியாற்றிய பிரபலத்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பெரிதாக இவர் படத்தில் நடிக்கவில்லை பல வருடங்களாக இவரை ரசிகர்கள் வலை வீசி தேடிக் கொண்டிருந்தார்கள் இந்த நிலையில் சமீபத்தில் பிரபல இணையதளத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் அவர் கூறிய பல சுவாரசியமான தகவலை இங்கே காணலாம். தமிழில் முதன் முதலாக “என் ரத்தத்தின் ரத்தமே” என்ற திரைப்படத்தின் மூலம் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து சாமுண்டி, தாலாட்டு, சரிகமபதநி, எல்லாமே என் ராசாதான், புள்ள குட்டிக்காரன், சீதனம், பூவே உனக்காக, காலம் மாறிப்போச்சு, அலெக்சாண்டர், கங்கா கௌரி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
சங்கீதா குழந்தை நட்சத்திரமாக ஒரு சில திரைப்படங்களை நடித்துக் கொண்டிருந்த பொழுது வெளியான எல்லாமே என் ராசாவே திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்பொழுது சங்கீதா பத்தாம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார் பார்ப்பதற்கு கரடு முரடான நடிகருக்கு ஒரு குழந்தை முகம் கொண்ட கதாநாயகி தேவை என்பதால் சங்கீதாவை தேர்ந்தெடுத்தார்கள்.
இந்த நிலையில் அது குறித்து சங்கீதா மனம் திறந்து பேசி உள்ளார் அவர் கூறுகையில் ராஜ்கிரன் அவர்களுடன் நடித்ததை என்னால் மறக்கவே முடியாது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன் அப்பொழுது “எல்லாமே என் ராசாதான்” திரைப்படத்தில் பெரிய பொண்ணு மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காக உடல் எடை அதிகரித்த பிறகு படப்பிடிப்பை துவங்கிக் கொள்ளலாம் என கூறி விட்டார்கள்.
அதனால் எனக்கு தினமும் ராஜ்கரன் சார் ஆபிசிலிருந்து தான் அனைத்து உணவுகளும் வரும் அதில் ஐஸ்கிரீம், வாழைப்பழம், சாப்பாடு, தயிர் என விதவிதமாக எடுத்து வருவார்கள் அது மட்டும் இல்லாமல் அனைத்தையும் சாப்பிட வேண்டும் என கூறுவார்கள் ஆனால் ஐஸ்கிரீம் வேணா சாப்பிடுவேன் சாப்பாடு என்னால் கொஞ்சம் தான் சாப்பிட முடியும் அதனால் பலமுறை நான் அழுது இருக்கிறேன்.
என்னுடைய அப்பா அம்மா சொல்லி கூட என்னால் சாப்பிட முடியாது ஆனால் ராஜ்கிரன் சார் சொல்லி அனுப்பியதால் நான் அழுது கொண்டே பலமுறை சாப்பிட்டு உள்ளேன் கடைசியில் அந்த திரைப்படம் என்னை கிராமப்புற மக்களிடம் கொண்டு சேர்த்தது அதன் பிறகு தான் நான் படிப்படியாக உயரத்தை அடைந்தேன் என அந்த பேட்டியில் சங்கீதா பேசியிருக்கிறார்