நடிகர் ஆனந்த் பாபு தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் இவர் பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் மகன் ஆவார். நடிகர் ஆனந்த் பாபு சினிமாவில் நடிகராக மட்டும் ஜொளிக்காமல் நடனம் ஆடுவதிலும் திறமையானவர் நடிகர் ஆனந்த் பாபு ஒரு காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர்.
அதன்பிறகு பட வாய்ப்பு குறைந்ததால் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் இவர் 1983 முதல் 1999 ஆம் ஆண்டு வரை பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்பொழுது மௌனராகம் என்ற சீரியலில் நடித்து வருகிரார். இந்த நிலையில் நடிகர் ஆனந்த் பாபு சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்தார் அதில் தன்னைப் பற்றியும் தனது அப்பாவை பற்றியும் நடிகர் விஜய் பற்றியும் பல சுவாரசியமான தகவலை கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது தனக்கு மருத்துவர் ஆகுவது தான் கனவாக இருந்தது நடிப்பு ஆக்டிங், டான்ஸ் இதெல்லாம் சுத்தமாக எனக்கு தெரியாது ஆனால் இதையெல்லாம் சவாலாக ஏற்றுக்கொண்டு நான் பயிற்சி செய்தேன். ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதில் பெரிதாக ஆர்வம் இல்லை ஆனால் அப்பாவின் திரைப்படங்களை பார்த்த பொழுது எனக்கு பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது.
முதன்முதலில் ஒரு மேடையில் நடனமாடி இருந்தேன் ஆனால் அப்பொழுது அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அப்பாதான் கலந்து கொண்டார் அப்பொழுது அப்பாவிடமே நான் பரிசை பெற்றேன் இந்த தகவலை செய்தித்தாளில் வந்த உடன் பல இயக்குனர்கள் அப்பாவிடம் நடிப்பதற்கு கால்சீட் கேட்டார்கள்.அவர்களில் அப்பாவின் நெருங்கிய நண்பர் ஒருவரும் கேட்டிருந்தார் உடனே அவர்கள் என்னிடம் கூட கேட்காமல் கால்ஷீட் கொடுத்துவிட்டார்.
நானும் அந்த திரைப்படத்தில் நடித்தேன் அந்த திரைப்படமும் ஹிட்டடித்தது அதன் பிறகு என்னுடைய சினிமா வாழ்க்கையும் தொடங்கியது. சினிமாவில் நாகேஷ் சார் பையன் என்னம்மா டான்ஸ் ஆடுகிறார் என பலரும் கூறும் பொழுது நான் அப்பாவின் பெயரை காப்பாற்றி விட்டேன் என மகிழ்ச்சி ஏற்பட்டது. ஒரு பொழுதும் என்னுடைய அப்பா பெயரை நான் கெடுக்க வில்லை. விஜய் நடிப்பில் விக்ரமன் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் பூவே உனக்காக.
இந்த திரைப்படத்தில் முரளி நடித்த ரோலில் முதலில் நான்தான் நடிக்க வேண்டியது. ஆனால் அப்பொழுது எனக்கு மன வருத்தமாக இருந்தது அதனால் அந்த திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை அந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் எனக்கு கொடுத்து இருக்கலாம் ஆனால் கெஸ்ட் ரோல் கொடுத்ததால் எனக்கு கஷ்டமாக இருந்தது. அப்பொழுது நான் விக்ரமன் சாருக்கு செல்லப்பிள்ளை அப்படியிருந்தும் எனக்கு கெஸ்ட் ரோல் கொடுத்து நடிக்க சொன்னது வருத்தமாக இருந்தது.
இருந்தாலும் அந்த திரைப்படத்தில் நடித்து இருக்கலாம் என இப்பொழுது தோன்றுகிறது நான் இனி சினிமாவில் காமெடியனாக நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளேன் வடிவேலு ரீ-என்ட்ரி கொடுப்பதுபோல் நானும் நடிக்க இருக்கிறேன் என அந்த பேட்டியில் கூறி முடித்தார்.