தளபதி விஜய் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார், சமீபகாலமாக விஜய் திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை படைத்து வருகிறது, கடைசியாக விஜய் நடித்த பிகில் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அது மட்டுமில்லாமல் ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனது, படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ரியா, ரம்யா, சாந்தனு, மேலும் பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள், இந்த திரைப்படத்தை ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட இருந்தார்கள் ஆனால் கொரோனா காரணமாக நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளதால் எந்த ஒரு படப்பிடிப்பும் நடத்த முடியவில்லை, அதேபோல் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.
இன்று வசூல் மன்னனாக விளங்கும் தளபதி விஜய்க்கு முதன்முதலில் சினிமா திரைப்பயணத்தில் மக்களிடம் நல்ல பெயரையும் வசூலையும் பெற்றுக்கொடுத்த திரைப்படம் பூவே உனக்காக, விஜய்க்கே நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது இயக்குனர் விக்ரமன் நல்ல திரைக்கதையை கொடுத்து தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்த்து விட்டார்.
அதேபோல் விக்ரமன் இயக்கிய திரைப்படங்களிலேயே அதிக நாள் ஓடிய திரைப்படமாக பூவேஉனக்காக அமைந்தது, சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்ரமன் பூவேஉனக்காக திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது கார்த்திக் தான் ஏனென்றால் கார்த்திகை மனதில் வைத்துதான் இந்த கதையை உருவாக்கினோம். ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால் விஜயை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
பூவே உனக்காக திரைப்படம் திரையரங்கில் மட்டும் 275 நாட்கள் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.