மீண்டும் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுக்கும் பூவரசி.! அதுவும் எந்த சீரியலில் தெரியுமா.?

poove-unakaha
poove-unakaha

தற்பொழுதுள்ள சின்னத்திரை நடிகைகளுக்கு மட்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியாக வலம் வந்து கொண்டிருக்கும் சன் டிவி தொடர்ந்து ஏராளமான புதிய சீரியல்கள் அறிமுகப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் பூவே உனக்காக இந்த சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகி புகழின் உச்சத்தை தொட்டவர் தான் நடிகை ராதிகா ப்ரீத்தி.

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும் அனைத்து ரசிகர்களும் இவர் மீண்டும் எப்பொழுது சின்ன திரையில் நடிப்பார் என மிகவும் ஆர்வமாக காத்து வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில்தான் தற்பொழுது மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொதுவாக சன் டிவி தொலைக்காட்சி மட்டுமல்லாமல் மற்ற மொழி தொலைக்காட்சி சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் சன் டிவி தொடர்ந்து புதுமுக நடிகர் நடிகைகளை களமிறக்கி வருகிறார்கள் அந்த வகையில் பூவே உனக்காக சீரியல் இளைஞர்களின் மத்தியில் பிரபலமடைந்த நிலையில் குறுகிய காலத்திலேயே டிஆர்பி-யில் முன்னணி வகித்தது இந்த சீரியலில் ஹீரோயினாக பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை ராதிகா பிரீத்தி.

இவர் கதிர் என்ற நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தார் கதிர் கதாபாத்திரத்தில் அருண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பூவரசி, கதிர் இந்த கேரக்டர்களை தொடர்ந்து தோழியாக கீர்த்தி ரோலில் நடிகை லிவிங்ஸ்டண்ட் மகள் ஜோவிதா நடித்திருந்தார்.இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரத்தில் திடீரென முதலில் ஜோவிதா இந்த சீரியலில் இருந்து விலகினார்.

அடுத்ததாக அருண் விலக்கிய நிலையில் இவருக்கு பதிலாக நடிகர் அசீம் நடித்து வந்தார்.பூவரசியாக தொடர்ந்து ராதிகா பிரீத்தி நடித்து வந்தார் பின்பு அவரும் ஒரு நாள் சீரியலை விட்டு விலகினார் இவ்வாறு முக்கிய நடிகர்,நடிகைகள் அனைவரும் விலகியதால் இந்த சீரியல் டிஆர்பி-யில் அடி வாங்கியது எனவே சில மாதங்களில் பூவே உனக்காக சீரியலை அவசர அவசரமாக முடித்து விட்டார்கள் இந்நிலையில் ராதிகா பிரீத்தி மீண்டும் சன் டிவியில் அறுவை சீரியலின் மூலம் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.