தளதளன்னு இருந்த பூர்ணா இப்படி அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.! வைரலாகும் புகைப்படம்.!

poorna

Poorna new look photos: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பூர்ணா. இவர் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி, போன்ற படங்களில் நடித்து ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இதனை அடுத்த இவர் பிறமொழி சினிமாவான மலையாளம், தெலுங்கு போன்ற படங்களில் நடித்து பிஸியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சில காலமாக சரியான பட வாய்ப்பு கிடைக்காத நிலையில் கிடைக்கும் படங்களில் தனது திறமையை வெளிக்காட்டி நடித்து வருகிறார். அந்த வகையில் சசிகுமார் நடிப்பில் வெளியான கொடிவீரன் என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார். இதன் பின் அவருக்கு பட வாய்ப்புகள் தமிழில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளது.

கொழுக் மொழுக் நடிகைகளில் ஒருவரான இவர் தற்போது உடல் எடையை குறைத்து ஆளே மாறிப் போய் உள்ளார் பூர்ணா.உடல் எடையை குறைத்த பூர்ணா அவர்கள் தற்போது நடித்தால் ஹீரோயினாக தான் நடிப்பார் என்று வரும் வாய்ப்பை தட்டி விடுககிறாராம் அம்மணி. சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.மேலும் தற்போது உடல் எடையை குறைத்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இதோ அந்த புகைப்படம்.

poorna