என் பொண்டாட்டிக்கு அப்புறம் நீ தான்.? கீர்த்தி சுரேஷ் பற்றி பேசிய போனி கபூர்

keerthy suresh
keerthy suresh

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஹீரோயின்னாக அறிமுகமானார். மலையாளத்தில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் “இது என்ன மாயம்” என்னும் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினர்.

அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், ரெமோ, தொடரி, பைரவா, சர்க்கார் என அடுத்தடுத்த ஹிட் படங்கள் கொடுத்து அசத்தினார் இதனால் கீர்த்தி சுரேஷின் சினிமா பயணம் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் இவருக்கு அதிக ரசிகர்களும் உருவாக தொடங்கினர் ஒரு கட்டத்தில் பெண் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து நயன்தாராவுக்கு இணையாக பேசப்பட்டார்.

தற்பொழுது கூட பட வாய்ப்புகள் அதிகம் குவிந்து வருகின்றனர் அந்த வகையில் 2023ல் இவர் கைவசம் பல படங்கள் இருக்கின்றன சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்து வருகிறார். இப்படிப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் பெரும்பாலும் படங்களில் கிளாமர் காட்டி நடித்ததே கிடையாது.

ஆனால் அண்மைக்காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அட்டகாசம் பண்ணி வருகிறார். அதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது..

நான் பார்த்ததிலேயே என் மனைவிக்கு அடுத்து அழகு என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான் என கூறியுள்ளார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த வயசில் இப்படி ஒரு கமெண்ட் கொடுப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை எனக் கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது.

keerthy suresh
keerthy suresh