தமிழ் திரை உலகில் நடிகைகளுக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதுபோல தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் பூனம் பஜ்வா. இவர் சேவல் படத்தில் நடிகர் பரத்துக்கு ஹீரோயினாக அறிமுகமானவர்.பல படங்களில் நடித்துள்ளார் இவரது படங்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம் ஏனென்றால்
இவரது ஆரம்பகால படங்களான தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் துரோகி தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் குடும்ப குத்துவிளக்காக காணப்பட்டார். இதன் மூலமாகவே இவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே சென்றார்கள் என்பது நிதர்சனமான உண்மை. இருப்பினும் அவருக்கு அடுத்து அடுத்ததாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை.
வரும் படங்களில் தனது கவர்ச்சியை வெளிக்காட்டிக் கொண்டு நடித்தார் குறிப்பாக அரண்மனை 2, குப்பத்து ராஜா மற்றும் ரோமியோ ஜூலியட் போன்ற படங்களாகும்.இதை தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் அவர் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வபொழுது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தற்போது அவர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளார். இருப்பினும் இவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இது எல்லாம் பட வாய்ப்பிற்காக என கேள்வி எழுப்பி வருகின்றனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.