நடிகை பூனம் பஜ்வா 2005ஆம் ஆண்டு தெலுங்கு சினிமா மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு 2006ம் ஆண்டு கன்னடத்திலும் நடித்து வந்தார் பின்பு தமிழ் சினிமாவில் 2007ஆம் ஆண்டு சேவல் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் முதன்முறையாக அறிமுகம் ஆனார்.
இந்த திரைப்படம் இவருக்கு ஓரளவு அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது அதனைத் தொடர்ந்து தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் இவர் நடித்த திரைப்படங்கள் இவருக்கு பிரபலத்தை பெற்றுக் கொடுக்கவில்லை அதனால் ஒரு காலகட்டத்தில் மலையாள பக்கம் தனது திரைப் பயணத்தை திசை திருப்பினார்.
கன்னடம் ,மலையாளம் என மாறி மாறி நடித்து வந்த பூனம் பஜ்வா அவர்களுக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்பு அமையவில்லை. அதன் பிறகு கிடைத்த வாய்ப்பை நடிக்க வேண்டுமென ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய குப்பத்து ராஜா திரைப்படத்தில் ஆன்ட்டி கதாபாத்திரத்தில் நடித்தார்.
ஆன்ட்டி கதாபாத்திரமாக இருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். சமூக வலைதளங்கள் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பூனம் பஜ்வா அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு படவாய்ப்பை தேடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது மலையாள நடிகைகளைப் போல் படுக்கையில் அமர்ந்து ஒரு மார்க்கமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.