பீஸ்ட் திரைப்படம் எப்படிப்பட்ட படம் என்பதை நாசுக்காக பேட்டியில் சொன்ன “பூஜா ஹெக்டே”.? வைரலாகும் வீடியோ.

VIJAY
VIJAY

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவுலகில் என்ட்ரி ஆனார்  முதல் படம் இவருக்கு தோல்வி படமாக அமைந்ததால் உடனடியாக தெலுங்கு மற்றும் பிற மொழி பக்கம் திசை திருப்பினார். தொடர்ந்து தெலுங்கில் கிளாமரையும், திறமையை காட்டி இவர் நடித்ததால் ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார்.

மேலும் ஒரு கட்டத்தில் டாப் நடிகர்களுடன் நடித்து தன்னை தக்கவைத்துக் கொண்டார் இதனால் தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக வலம் வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் சினிமாவில் நடிக்க கால் தடம் பதித்துள்ளார்.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் என்னும் படத்தில் நடித்து உள்ளார் இந்த படம் 14ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்த படத்தில் இருந்து இதுவரை ஒரு சில அப்டேட்களை  கொடுத்து ரசிகர்களை உற்சாகம் அடைய வைத்த நிலையில் அடுத்ததாக இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலரை எதிர்நோக்கிய ரசிகர்கள் இருக்கின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பூஜா ஹெக்டே  அண்மையில் பேட்டி ஒன்றில்  பீஸ்ட் படம் எப்படிப்பட்டது என்பது குறித்தும் அவர் பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது : இது ஒரு ப்ராப்பர் நெல்சன் meets விஜய் படம். இரண்டு உலகமும் இணைந்த

நல்ல crossover படம். இந்த வருடம் என்னுடைய படங்கள் பல வருகின்றன எல்லாமே சிறப்பான படங்கள். பீஸ்ட் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்களை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறினார். இதோ நடிகை பூஜா ஹெக்டே பேட்டி கொடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோ.