தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளிவந்தது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று இருந்தது. இந்நிலையில் நேற்று இவருக்கு பிறந்த நாள் என்பதால் ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என்று அனைவரும் நடிகர் விஜய்க்கு தங்களது வாழ்த்துகளை கூறி வந்தார்கள்.
இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது விஜய் பிஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டேக் மற்றும் காமெடி நடிகர் யோகி பாபு டிக் டாக் அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். அந்தவகையில் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது.
சென்னையில் போடப்பட்டுள்ள செட்டில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருவரும் பிஸ்ட் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். இந்நிலையில் நேற்று தளபதி விஜயின் பிறந்தநாள் என்பதால் பூஜா ஹெக்டே நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
அதில் பிஸ்ட் திரைப்படத்தில் உங்களுடன் இணைந்து நடிப்பது மிகவும் ஆர்வமாக உள்ளது என்றும் மிகவும் விரைவில் படப்பிடிப்பின் செட்டில் சந்திப்போம் என்றும் கூறியுள்ளார். இவர் விஜய் வாழ்த்துக்களை கூறி இருந்தாலும் மிகவும் லேட்டாக கூறியதால் ரசிகர்கள் கொஞ்சம் கடுப்பில் இருந்து வருகிறார்கள்.
தற்பொழுது விஜய் தனது 66வது திரைப்படத்தை முதன்முறையாக தெலுங்கில் நடிக்க உள்ளார். இதுகுறித்து இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வமான தகவல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.