தயாரிப்பாளரிடம் அத்துமீறி நடந்துகொண்ட பூஜா ஹெக்டே..! கையும் களவுமாக மாட்டிக்கொண்ட சம்பவம்..!

pooja-hegde
pooja-hegde

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

ஆனால் இந்த திரைப்படத்தில் இவருக்கு சரியான வரவேற்பு இல்லாத காரணத்தினால் இந்த திரைப்படம் மாபெரும் தோல்வியை சந்தித்தது பின்னர் இனிமேல் தமிழ் நமக்கு செட்டாகாது என்ற காரணத்தால் பிற மொழி திரைப்படங்களில் நடிப்பதற்கு அதிக அளவு ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்

இதனை தொடர்ந்து சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட்  திரை படத்தில் நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நினைத்த நிலையில் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துவிட்டது.

இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் இயக்கியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை கலாநிதிமாறன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக தயாரித்துள்ளார்.  இந்த திரைப் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை பூஜா ஹெக்டே தன்னுடைய உதவியாளர்கள் என்ற பெயரில் 12 பேரை அழைத்து வருவது வாடிக்கையாக இருந்தது.

அந்தவகையில் இவர்களுக்கு உணவு மற்றும் மற்ற செலவு ஆகிய அனைத்திற்கும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து மட்டுமே காசை வாங்கி செலவு செய்து வந்துள்ளார் அந்த வகையில் தயாரிப்பு நிறுவனமானது பூஜாவிடம் ஏற்கனவே வீண் செலவு செய்யக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது கணக்கு வழக்கு பார்க்கையில் அதிக அளவு பணம் வாங்கிய காரணத்தினால் தயாரிப்பு நிறுவனமான பூஜாவிடம் அந்தப் பெருந்தொகையை கேட்டு உள்ளார்களாம். மேலும் நடிகை பூஜாவும் தருகிறேன் என ஒப்புக்கொண்டுள்ளதாக சமூக வலைதளப் பக்கத்தில் செய்திகள் வைரலாக பரவி வருகிறது.