பொதுவாக ஒரு நடிகை எடுத்தவுடன் சினிமாவில் பிரபலமடைந்து விட முடியாது சமீப காலங்களாக ஒரு சில நடிகைகள் தாங்கள் நடிக்கும் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்தாலும் முன்பெல்லாம் அது மிகவும் கடினம் அந்த வகையில் தமிழில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி அது பெரிதாக வெற்றி பெறாத காரணத்தினால் தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தவர் தான் நடிகை பூஜா ஹெக்டே.
இதற்கு தெலுங்கு சினிமா மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக இருந்து இதன் மூலம் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் நடிப்பதை தொடர்ந்தார். இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார்.
இவ்வாறு தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்பொழுது தெலுங்கில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சீதா ராமம் திரைப்படத்தில் முதலில் பூஜா ஹெக்டேவை தான் ஹீரோயினாக நடிப்பதற்காக படக் குழுவினர்கள் கேட்டுள்ளார்கள் ஆனால் சில காரணத்தினால் அந்த திரைப்படத்தில் இவரால் நடிக்க முடியாமல் போய்வுள்ளது.
அதாவது தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் ஹனு ராகவபுடி இயக்கத்தில், துல்கர் சல்மான், மிருணாள் தாகூர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகளின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் தான் சீதா ராமம். ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்று வரும் இந்த திரைப்படத்தின் முதலில் கதாநாயக சீதாலட்சுமி வேடத்தில் நடிப்பதற்காக பூஜா ஹெக்டேகை தான் ஒப்பந்தம் செய்து உள்ளார்களாம்.
ஆனால் தற்பொழுது பூஜா கேட்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவே அவருக்காக படப்பிடிப்பை தள்ளி வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்பதனால் தான் வேறு வழி இல்லாமல் வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய ஆரம்பித்தார்களா.
அப்பொழுது தான் ஹிந்தி சீரியல்களின் மூலம் பிரபலமான மிருணாள் தாகூர் அவர்களை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளனர்.மிருணாள் தாகூர் சீரியல்களில் மட்டுமல்லாமல் மராத்தி மற்றும் ஹிந்தி இரண்டு மொழிகளிலும் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.