தமிழ் சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் ஒரு சில திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்து விடுவார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் வெளியாகிய முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே இவர் இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தார் அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழில் மீண்டும் விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பை பெற்று கொடுத்தது இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார் அதிலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள அரபி குத்து பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
இந்த நிலையில் மீண்டும் பூஜா ஹெக்டே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் இவர் புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிக லைக் போட்டு வருவார்கள்.
இந்த நிலையில் தற்பொழுது பூஜா ஹெக்டேவின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது அந்த புகைப்படம் பள்ளி பருவத்தில் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் போல் தெரிகிறது.
இதோ அந்த புகைப்படம்.