தளபதி படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் கால்ஷீட் கொடுக்க மறுக்கும் பூஜா ஹெக்டே.! காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான பல நடிகைகள் ஒரு படம் மட்டும் நடித்து பிரபலமடைந்த விட்டு தெலுங்கு அல்லது மற்ற மொழித் திரைப்படங்களில் தொடர்ந்து பல ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கலக்கி வருபவர்கள் பலர் உள்ளார்கள்.

அந்த வகையில் மிஷ்கின் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இந்த முதல் படத்தில் மட்டும் நடித்து விட்டு தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்தவகையில் பல வருடங்கள் கழித்து தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 65வது திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீண்டும் அறிமுகமாக உள்ளார். இதுமட்டுமல்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா அளவிற்கு சம்பளம் வாங்கி வருகிறாராம்.

இவர் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது பல கோடி பட்ஜெட்டில் முன்னணி நடிகர்கள் நடித்து வரும்  ஆச்சாரியா, ராதே ஷ்யாம், மோஸ்ட் எளிச்சுப்பில் பேச்சிலர், சர்க்கஸ், தளபதி 65 போன்ற திரைப் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ்பாபு திரிவிக்ரம் போன்றவர்கள் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் பூஜா ஹெக்டேக்கை நடிக்க கேட்டுள்ளார்கள். ஆனால் பூஜா ஹெக்டே திட்டவட்டமாக இத்திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியாது என்று மறுத்து விட்டாராம்.