விஜயை தொடர்ந்து டாப் நடிகருக்கு கொக்கி போடும் பூஜா ஹெக்டே – அதிர்ச்சியில் தமிழ் சினிமா நடிகைகள்..

pooja hegde
pooja hegde

மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் பூஜா ஹெக்டே. ஆனால் அந்த படம் இவருக்கு தோல்வி படமாக அமையவே பின் இவர் தெலுங்கு மற்றும் இந்தியில் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்த பூஜா ஹெக்டே.

சினிமாவையும் தாண்டி ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசினார் அதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு பிரபலமாக மாறினார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமா பக்கம் திரும்பவும் உள்ளார். எடுத்த உடனேயே தளபதி விஜயுடன் இணைந்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அசத்தியுள்ளார். இந்தப் படம் வெற்றி பெறும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய சிறப்பாக பேசிவரும் பூஜா ஹெக்டே அடுத்ததாக அஜித் பற்றி அவர் பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது விஜய்யுடன் நடித்து விட்டேன் அடுத்ததாக அஜித்துடன் நடிக்க ஆசையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அஜீத்துடன் நடித்து விட்டால் அவரது மார்க்கெட்டும் தொட முடியாத அளவிற்கு உச்சத்தை எட்டும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு..

தற்போது நைசாக கொக்கி போட்டு உள்ளார் என பலரும் கூறி வருகின்றனர் அதில் அவர் இன்னும் சில விஷயங்களை பேசி உள்ளார். ஒருவேளை அஜீத் விஜய் இணையும் படத்தில் வாய்ப்பு  கிடைத்தால் கூட நிச்சயம் நடிப்பேன் என கூறி உள்ளார். இதை அறிந்த ரசிகர்கள் சைடுல கேப் பில் அஜித் படத்துக்கு வாய்ப்புக் கேட்கிறார் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.