சமீபத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இத்திரைப்படத்தின் சூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து வருகிறது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.
பூஜா ஹெக்டே முதலில் தமிழில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் இத்திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கில் ஆர்வம் செலுத்தி தனது சிறந்த நடிப்பு திறமையினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் பூஜா ஹெக்டே சில வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக உள்ளார். இந்நிலையில் தளபதி 65 திரைப்படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகருடன் ஜோடி சேர உள்ளார்.
அந்தவகையில் சூர்யா நடிக்க உள்ள கிராமத்து கதையை மையமாக வைத்து ஒரு புதிய திரைப்படம் உருவாக உள்ளது இத்திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டேக் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.