சரண்யாவை ஒரே வார்த்தையில் மடக்கிய பொன்வண்ணன்.. 70 வருடங்கள் கால்ஷீட் கேட்டாரா.!

saranya-ponvannan
saranya-ponvannan

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஒரு காலகட்டத்தில் கலக்கி வந்து பிறகு வயதான காரணத்தினால் அம்மா உள்ளிட்ட குறிப்பிட்ட கதாபாத்திரங்களில் நடித்து வந்து தற்பொழுது வரையிலும் தொடர்ந்து பிசியாக நடித்து வருபவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் தனது வாழ்வில் ஒரே வரியில் ப்ரொபோஸ் செய்திருக்கும் காதல் கதையை குறித்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சரண்யா பொன்வண்ணன் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார் அந்த வகையில் உலகநாயகன் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் மேலும் நாயகன், அஞ்சலி என பல ஹிட் திரைப்படங்களில் சரண்யா நடித்திருந்தார். அதன் பிறகு தான் தொடர்ந்து விஜய், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களின் அம்மா கேரக்டரில் நடித்து இருந்தார்.

மேலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அனைத்து இயக்குனர்களும் ஹீரோக்களுக்கு அம்மாவாக தொடர்ந்து சரண்யா பொன்வண்ணனை தேர்ந்தெடுத்து வந்தார்கள். மேலும் தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் நடித்ததன் மூலம் தேசிய விருதையும் பெற்றார்.அந்த வகையில் எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, களவாணி,முத்துக்கு முத்தாக,மகளிர் மட்டும், ஒரு கல் ஒரு கண்ணாடி, கொடி என பல திரைப்படங்களில் அம்மாவாக நடித்திருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து இவருக்கு பல விருதுகளும் குவிந்து வந்தது இவ்வாறு சினிமாவையும் தாண்டி இவர் விருதபாக்கத்தில் உள்ள தனது வீட்டில் ஒரு ஸ்பெஷல் டிசைனிங் ஸ்கூல் வைத்து நடத்தி வருகிறார். படத்தில் நடித்துக் கொண்டே இந்த பேஷன் டிசைனிங் ஸ்கூலில் 300 பேருக்கு ஸ்பெஷல் டிசைனிங் மற்றும் ஸ்டிச்சிங் சொல்லி வருகிறார். இவ்வாறு பிசியாக இருந்து வரும் இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர் பல பேருக்கு நடிகை சரண்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது தெரியாது. நடிகை சரண்யா கடந்த 1988ஆம் ஆண்டு நடிகர் ராஜசேகரை திருமணம் செய்து கொண்டார் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் தான் நடிகர் ராஜசேகர். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்திருந்தார்.

மேலும் ராஜசேகர் மற்றும் சரண்யாவுக்கு திருமணமான ஒரு ஆண்டிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார்கள் கடந்த ஆண்டு ராஜசேகர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் தான் சரண்யா அவர்கள் நடிகர் பொன்வண்ணன் அவர்களை திருமணம் செய்து கொண்டார் கருத்தம்மா திரைப்படத்தில் சரண்யாவை முதன்முறையாக பொன்வண்ணன் சந்தித்துள்ளார். அந்த படத்தில் இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக தான் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் சமீப பேட்டி ஒன்றில் பொன்வண்ணன் அவர்கள் எனக்கு போன் செய்து உங்களுடைய கால்ஷீட் வேண்டும் என கேட்டார் நானும் எத்தனை நாட்கள் என்று கேட்டேன் 70 வருடத்திற்கு என்று கூறினார் உடனே எனக்கு ஷாக் ஆகிவிட்டது இப்படிப்பட்ட நிலையில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டேன் அதன் பிறகு நான் உங்களை காதலிக்கிறேன் என்று நினைத்துக் கொள்ள வேண்டும் உங்களுடன் வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் கேட்டேன் உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் இல்லை என்றால் எந்த பிரச்சனையும் இல்லை என்று சொன்னார்.

நான் அவரிடம் யோசித்து சொல்கிறேன் என கூறியிருந்தேன் அதன் பிறகு அவர் நன்றாக யோசித்து சொல்லுங்கள் என சொன்னார் அதன் பிறகு தான் என்னுடைய தந்தையினரிடம் அவர் சும்மா விளையாடுகிறார் செட்டில சிரித்து கூட கிடையாது அவர் ஏன் இப்படி பேசினார் என்று தெரியவில்லை என்று கூறினேன் அதன் பிறகு தான் இவர்களுடைய திருமணம் நடைபெற்றதாக கூறியுள்ளார்.