மணிரத்தினம் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி ,கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார் விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்தத் திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது முதல் பாகம் தான் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது.
இந்த முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை 500 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து மிகவும் பிரமாண்டமாக தயாரித்தது. அதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்துடன் தனுஷின் நானே வருவன் திரைப்படம் மோதியது. தனுஷின் நானே வருவன் திரைப்படம் தடம் தெரியாமல் போனது பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் திரையரங்குகள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது அது மட்டும் இல்லாமல் திரையரங்குகளில் இத்தனை நாள் ஆகியும் ஹவுஸ்புல் ஆக ஓடிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இதுவரை வெளியாகிய திரைப்படங்களில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல் தான் அதிக வசூல் என கூறப்படுகிறது இதற்கு முன் வெளியாகிய விக்ரம் திரைப்படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வசூல் முறியடித்துள்ளது. இந்த வருடத்திலேயே இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வசூல் செய்துள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஏற்கனவே பொன்னியின் செல்வன் திரைப்படம் 400 கோடி வசூலை பெற்று விட்டதாக கூறப்பட்ட நிலையில் விரைவில் 500 கோடியை எட்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இதுவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக நேற்று வரை 435 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் 500 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.