தமிழ் சினிமாவில் 100 ஆண்டு கால வசூல் நிலவரத்தில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கி கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் சாதனை படைத்திருந்தது அந்த சாதனையை தற்பொழுது மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் முறியடித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகிய விக்ரம் திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தின் வசூலை எந்த திரைப்படத்தாலும் முறியடிக்க முடியாது என்பது என்ற எதிர்பார்ப்புடன் நிலவியது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகிய சில நாட்களிலேயே விக்ரம் திரைப்படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.
இரண்டு திரைப்படத்திற்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது அதாவது இரண்டு திரைப்படமும் இந்த வருடத்திலேயே வெளியாகி மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது. மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாக்கிய பொன்னின் செல்வன் திரைப்படம் தமிழகத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையுடன் இருக்கிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். இந்த தகவல் தற்பொழுது திரையுலகினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னியின் செல்வன் உலக அளவில் 500 கோடி வசூலை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படத்தின் வசூலை வேறு எந்த ஒரு திரைப்படமும் முறியடிக்க முடியுமா என்று கேள்விக்குறியை எழுப்பியுள்ளது ஏனென்றால் அந்த அளவு பொன்னின் செல்வன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது இன்னும் திரையரங்குகள் கூட்டம் கூட்டமாக மக்கள் அலை மோதுகிறது படத்தை காண.
அதுமட்டுமில்லாமல் பொன்னின் செல்வன் முதல் பாகத்தின் வசூலை பொன்னின் செல்வன் இரண்டாம் பாகத்தின் படம் தான் முறியடிக்கும் என திரையுலகினர் பலரும் கூறி வருகிறார்கள். மேலும் பொன்னியின் செல்வன் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டு வருகிறது காலத்தால் அழியாத காவியமான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக கணக்கட்சிதமாக கொண்டு வந்து இயக்கியுள்ளார் மணிரத்தினம்.
எந்த கதாபாத்திரத்திற்கு எந்த நடிகரை தேர்வு செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக தேர்வு செய்து பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு உயிர் கொடுத்து உள்ளார் மணிரத்தினம் இந்த படத்தின் வெற்றி முழுக்க முழுக்க மணிரத்தினத்திற்கே உரித்தாகும் என பலரும் கூறி வருகிறார்கள்.