பொன்னியின் செல்வன் டிவிட்டர் விமர்சனம்.!

ponniyin-selvan
ponniyin-selvan

மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தில் கார்த்தி, த்ரிஷா ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இன்று வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள் அதை தற்பொழுது காணலாம்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக  எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதல் பாகம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகவும் சூப்பராக இருப்பதாக நெடிசன் ஒருவர் குறிப்பிட்டார் அது மட்டும் இல்லாமல் மணிரத்தினத்தின் திரைக்கதை சூப்பர் என்றும் பெருமையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும் பிரம்மாண்ட காட்சி அமைப்பும் ஏ ஆர் ரகுமானின் இசை பிரமாதம் கார்த்தியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் திரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகியோர்களின் நடிப்பையும் பாராட்டியுள்ளார்.

மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பாசிட்டிவ் நெகட்டிவ் குறித்து விமர்சனம் ஒருவர் செய்துள்ளார் அதில் கார்த்தி, சியான் விக்ரம் நடிப்பு, ஏ ஆர் ரகுமான் பாடல் பின்னணி இசை கதை காட்சியமைப்பு பிரம்மாண்ட தயாரிப்பு ஆகியவை அருமையாக இருப்பதாகவும் ஒரு சில இடங்களில் தோய்வு ஏற்ப்படுவதாகவும் நெட்டிசன்  ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒருவர்  பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்காதவர்களுக்கு இந்த திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களை எளிதாக புரிந்து கொள்வது கஷ்டம் தான் இரண்டு முறை படத்தை பார்த்தால் தான் புரியும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு நெட்டிசன் பொன்னியின் செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் சரித்திர கதை  கார்த்தி விக்ரம் நடிப்பு மிரட்டலாக இருந்தது அது மட்டும் இல்லாமல் பலம் வாய்ந்த திரைக்கதை ஏ ஆர் ரகுமானின் இசை என படத்திற்கு மிகப்பெரிய மிகப்பெரிய பலம் ரவிவர்மாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு நேட்டிசன் முன்பதிவு என்ன ஒரு அனுபவம் வாவ் எனவும் குறிப்பிட்டுள்ள அதே போல் மற்றொரு பதிவில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி வந்தியதேவன் அமர்க்களம் படுத்தியுள்ளார் எனவும் கார்த்தி அந்த கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து விட்டார் எனவும் மணிரத்தினத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இப்படி பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.