மிரட்டலாக வெளியானது பொன்னியின் செல்வன் டிரைலர்.! ஒவ்வொரு கேரக்டரும் சும்மா தெறிக்குதே.?

ponniyin-selvan
ponniyin-selvan

மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான பொன்னியின் செல்வம் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் விக்ரம் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய்,  பார்த்திபன், திரிஷா,   விக்ரம் பிரபு சாரா அர்ஜுன், பிரபு, சரத்குமார், கிஷோர், பிரகாஷ் ராஜ், வினோதினி நிழல்கள் ரவி, மோகன் ராமன், நாசர் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இந்தத் திரைப்படத்தை எம்ஜிஆர் முதல் கமலஹாசன் வரை தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் எடுக்க விரும்பினார்கள். பல நடிகர்களின் கனவாக இருந்த இந்த படம் மணிரத்தினம் மூலம் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தை எடுக்க பலமுறை மணிரத்தினம் ட்ரை செய்துள்ளார் ஆனால் தற்பொழுது படத்திற்கு வடிவம் கிடைத்துள்ளது.

பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக எடுப்பதற்கு முக்கிய காரணம் லைக்கா நிறுவனம் தான் அந்த நிறுவனம் பல கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக எடுக்க உதவியுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார் ஒளிப்பதிவுக்கு ரவி வர்மம் கலைக்கு தோட்டா பல டெக்னிக்கல் டீமை பயன்படுத்தி இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் மணிரத்தினம்.

வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கிறது இதன் நிலையில் நேற்று இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது இந்த இசை வெளியீட்டு விழாவில் டிரைலரையும் பட குழு வெளியிட்டுள்ளது மேலும் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கமலஹாசன் ஆகியோர்கள் கலந்துகொண்டு இசை வெளியீட்டு விழாவை சிறப்பித்தார்கள்.

ட்ரெய்லரில் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. அதனால் படத்தின் மீதான எதிர்பார்க்கும் ரசிகர்களுடைய அதிகரித்துள்ளது.