தெலுங்கு சினிமாவியே உச்சத்திற்கு கொண்டு சேர்த்த திரைப்படம் ராஜமௌலியன் பாகுபலி. அதேபோல தற்போது தமிழ் சினிமாவின் பெருமையாக உருவாகி உள்ள திரைபடம் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன்.
தற்போது மணிரத்தினம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.
பாகுபலி அளவுக்கு பொன்னியின் செல்வன் இல்லை என ட்ரோல் செய்ய ஆரம்பிக்க twitter-ல் சண்டை வெடித்துள்ளது. பொன்னியின் செல்வனா? பாகுபலியா? எந்த படம் பெஸ்ட் என்கிற சண்டையை சோசியல் மீடியாவில் ஹாஸ்டேக் பாகுபலி உடன் ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் ஒரு சில சினிமா ரசிகர்கள் இரண்டு படங்களும் பெரிய பட்ஜெட் படம் தான் பொன்னியின் செல்வன் தமிழர்களின் பெருமை என்று கூறி வருகின்றனர். டோலிவுட் ரசிகர்கள் பாகுபலி படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் பிரமாண்டமாக இருக்கும் ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் அந்த அளவு பிரம்மாண்டம் இல்லை என்ற தெலுங்கு ரசிகர்கள் ஒரு பக்கம் சந்டையிட்டர்.
இதற்கு தமிழ் ரசிகர்கள் பெருத்த பதிலடி கொடுத்துள்ளார்கள். அதாவது முதலில் பாகுபலி பல காட்சிகள் பொன்னியின் செல்வன் கதையிலிருந்து காப்பி அடிக்கப் பட்டது தான் இது உண்மையான சோழர்களின் வரலாறு படம் முழுக்க முழுக்க பாகுபலி போல் கற்பனை படம் இல்லை இரண்டையும் கம்பர் செய்வது சரியானது கிடையாது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் படத்துடன் பாகுபலி குப்பை படத்தை கம்பர் செய்யாதிங்க என்று தமிழ் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். அதேசமயம் ஏகப்பட்ட டோலிவுட் ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படமும் பகுபலி படம்மும் சிறந்த படம் சினிமாவை ரசித்து கொண்டாடுங்கள் ஆனால் இந்த மாதிரி சண்டை போட வேண்டாம் என சமாதானப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இயக்குனர் ராஜமௌலியும் மணிரத்தினமும் கதை சொல்வதிலும் காட்சிகளை அமைப்பதிலும் வல்லுநர்கள் என்பதை திரையில் நிரூபித்து காட்டி வருகிறார்கள் அப்படி இருக்கையில் ரசிகர்கள் தேவை இல்லாமல் சண்டை போட வேண்டாம் முடிந்தால் படத்தை பார்த்து விட்டு ரசியுங்கள் என்று பலரும் கூறி வருகின்றனர்.