இயக்குனர் மணிரத்தினம் இதுவரை எத்தனையோ படங்கள் கொடுத்திருக்கிறார் ஆனால் அவருடைய கேரியரில் மிகப்பெரிய ஒரு வெற்றிப் படம் பொன்னியின் செல்வன் முதல் பாகம் தான் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது படத்தில் விக்ரம், ஐஸ்வர்யாராய், விக்ரம் பிரபு, கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சரத்குமார்..
ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர் முதல் பாகம் நல்ல விமர்சனத்தை பெற்று 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகண்டது அதனைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் இன்று திரையரங்குகளில் கோளாக்கலமாக வெளியானது முதல் பாகத்தை விட..
இந்த படம் சிறப்பாக இருப்பதாக விமர்சனங்கள் வந்துள்ளன இதனால் இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றியை ருசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் மூன்றாவது பாகம் உருவாகுமா என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வந்துள்ளது
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழிவர்மனாக நடித்த ஜெயம் ரவியிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் அதில் ஒன்றாக பொன்னியின் செல்வன் மூன்றாவது பாகம் உருவாகுமாக என கேட்டதற்கு ஜெயம் ரவி சிரித்துவிட்டு BYE என கூறி அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவினார்.
இதற்கு முன்பு இயக்குனர் மணிரத்தினத்திடம் பொன்னியின் செல்வன் மூன்றாவது பாகம் உருவாகுமா என கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த அவர் ps 3 நிச்சயம் வரும் ஆனால் அந்த படத்தை யார் எடுப்பார்கள் என்பது தெரியவில்லை என கூறினார். இவர் சொல்வதைப் பார்த்தால் நிச்சயம் பொன்னியின் செல்வன் மூன்றாவது பாகம் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் உண்மை..