கேஜிஎஃப் திரைப்படத்தை தும்சம் செய்ய வருகிறது பொன்னியின் செல்வன்.! ஆரம்பமே 100 கோடி அதிரடி காட்டும் பிரபல OTT நிறுவனம்.!

kgf-2-ponniyin-selvam
kgf-2-ponniyin-selvam

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது அந்த வகையில் கடைசியாக வெளியாகிய விஜய் நடித்த beast திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்றது. இந்த நிலையில்  தெலுங்கு கன்னட சினிமாவில் வெளியாகிய திரைப்படங்கள் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி அடைந்துள்ளன.

அந்த வகையில் புஷ்பா, ஆர் ஆர் ஆர், கேஜிஎப் இரண்டாவது பாகம் ஆகிய திரைப்படங்களை கூறலாம். இதைப்பார்த்த ரசிகர்கள் தமிழில் பெரிய நடிகர்களை வைத்து இயக்கும் இயக்குனர்கள் இல்லையா என பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தார்கள். இதற்கு மணிரத்தினம்  தமிழில் பிரம்மாண்ட திரைப்படம் வெளியாகும் அதற்கான இயக்குனர்கள் உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். புதுப் புது இயக்குனர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் நிச்சயம் பிரம்மாண்ட திரைப்படம் வெளியாகும் என கூறியிருந்தார்.

இந்தநிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கி உள்ளார் இந்த திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார் இந்த நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம்தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மணிரத்தினத்தின் நிறுவனமாகும். மேலும் இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யாராய், ஜெயம் ரவி விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது.  இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த நிலையில் இந்த திரைப்படம் ott  இணையதளத்திற்கு விலை பேசப்பட்டு உள்ளது என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அமேசான் ப்ரைம் நிறுவனம் சுமார் 125 கோடிக்கு முதல் பாகத்தையும் இரண்டாவது பணத்தையும் வாங்கி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது திரையரங்குகளில் வெளியான பிறகு இந்த திரைப்படம்  ott இணையதளத்தில் வெளியாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் அமேசான் பிரைம் இல் வெளியாகிய பல தமிழ் படங்கள் இதுவரை இந்த அளவு விலை போனதே கிடையாது என கூறுகிறார்கள்.

சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் உருவாகி வெளியாவதற்கு முன்பே இவ்வளவு விலைக்கு விற்பனை செய்துள்ளது தமிழ் சினிமாவை ஆச்சரியப்படுத்தி உள்ளது மேலும் இதற்கு முன் வெளியாகிய  ஆர் ஆர் ஆர்,  புஷ்பா, கேஜிஎப் ஆகிய திரைப்படங்களின் பிரமாண்டங்களை சுக்குநூறாக நொறுக்குவதற்காகவே இந்த திரைப்படம் உருவாகியுள்ளதாக தமிழ் ரசிகர்கள் கூறுகிறார்கள்.