பொன்னியின் செல்வன் படத்துக்கு மட்டும் இப்படியா.! அப்போ மத்த படம்லாம் சும்மா எடுத்தாங்களா.! ரசிகர்கள் காட்டம்

ponniyin-selvan
ponniyin-selvan

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படம் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த படத்தில் தமிழ், தெலுங்கு நடிகர்கள் முன்னணி நட்சத்திரங்கள் என பலர் நடித்த பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ள இந்த திரைப்படம்  இன்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோடு வருகிறது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தை கலக்கியின் புகழ் பெற்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்ட கற்பனை காவியம் ஆகும். இந்த படத்தை பார்த்த பலர் முதல் பாதி  நன்றாக உள்ளது எனவும் இரண்டாம் பாதி மணிரத்தினம் அவருடைய எல்லையைத் தாண்டி எடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளனர். அந்த அளவிற்கு தன்னுடைய முழு உழைப்பை போட்டு எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

இந்த நிலையில் தற்போது வெளியாகும் திரைப்படங்கள் வெளியான முதல் நாளிலேயே இனைய தளங்களில் முழு படத்தை வெளியிடுகிறார்கள் அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகிய நிலையில் இந்தப் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என லைக்கா நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு தொடர்ந்தது.

இன்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் சுந்தர் இப்படம் சுமார் 2.45க்கு மேற்பட்ட இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. இதனால் படகு மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதே போல் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு மட்டும் இப்படி செய்தது ஏன் என்றும் மற்றவர்கள் மட்டும் உழைப்பை போட்டு படங்களை எடுக்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெடிசங்கள்.