தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம் இவர் தற்பொழுது மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் அதாவது 500 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
தன்னுடைய திரைப்பயணத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படமாகும். மணிரத்தினம் லைக்கா நிறுவனத்துடன் மிகவும் துணிச்சலாக கைகோர்த்து பெரிய பட்ஜெட் திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் மணிரத்னம் தன்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் சார்பிலும் லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறார்.
மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யாராய், திரிஷா போன்ற முன்னணி நடிகைகளும் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள்.
இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிப்பதற்காக பிரபல பாலிவுட் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார் ஆனால் திடீரென இந்த திரைப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது அதற்கு காரணம் திட்டமிட்ட தேதியில் சூட்டிங் நடக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அமிதாப் பச்சன் கதாபாத்திரம் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என ஏற்கனவே அறிவித்து இருந்தார்கள் ஆனால் திடீரென பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் படத்திலிருந்து விலகுவதாக கூறியுள்ளதால் படக்குழுவினர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.