“பொன்னியின் செல்வன்” திரைப்படம் – இதுவரை எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா.? முழு லிஸ்ட் இதோ..

ponniyin selvan
ponniyin selvan

அண்மை காலமாக சினிமா உலகில் வரலாற்று மற்றும் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பல படங்கள் உருவாக்கப்படுகின்றன அந்த படங்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைகிறது அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் கல்கி எழுதிய  பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை எடுத்துள்ளார்.

படம் நீளமாக இருக்கும் காரணத்தினால் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருக்கிறார் முதல் வாகம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.  படம் நன்றாக இருக்குமோ இருக்காது என மக்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு பக்கம் புலம்பி வந்தனர்.

ஆனால் படம் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாண்டமாக இருந்த காரணத்தினால் நல்ல வரவேற்பை பெற்று படம் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது அதன் காரணமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கிறது. வருகின்ற நாட்களும் வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகாமல் இருப்பதால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் குறையாது அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் நான்கு நாள் முடிவில் மட்டுமே 240 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனையை கண்டிருக்கிறது. இந்த சமயத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் எந்தெந்த இடத்தில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து ஒரு லிஸ்ட் வந்துள்ளது அதை பார்ப்போம்..

தமிழ்நாட்டில் மட்டும் 85.5 கோடி, ஆந்திரா மற்றும் தெலுங்கானா 16 கோடி, கேரளா 12.2 கோடி கர்நாடகா 14.25 கோடி, இதர மாநிலங்களில் 15.5 கோடி, வெளிநாடுகள்  ($ 13.05M) : 16.2 கோடி. ஒட்டுமொத்தமாக பொன்னியின் செல்வன் திரைப்படம்  இதுவரை 247.65 கோடி வசூல் செய்திருக்கிறது.