சினிமா உலகில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் நாம் எதிர்பார்ப்பதை விட சிறப்பாக இருந்தால் போதும் ரசிகர்கள் அந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது வழக்கம் மேலும் அந்த படத்தை ஒரு வெற்றி படமாக மாற்றுவார்கள். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் அண்மைக்காலமாக பல படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று இருக்கின்றன.
அதில் ஒன்றாக தற்பொழுது வெளிவந்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். படம் வெளிவந்து 9 நாட்களான பிறகும் பல்வேறு திரையரங்குகளில் படம் ஹவுஸ் புள்ளாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படம் ஒரு வரலாற்று கதை என்பதால் அனைவரும் இந்த படத்தை பார்க்க ஆசைப்படுகின்றனர்.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், ரகுமான் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் ஒவ்வொருவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்து இருந்தனர்.
படம் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் படக்குழுவும் சரி தயாரிப்பு நிறுவனமும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கிறதாம். இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்து இதுவரை 9 நாட்கள் ஆகின்ற நிலையில் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்து தகவல்கள் கிடைத்திருக்கிறது.
அதன்படி பார்க்கையில் இதுவரை மட்டுமே இந்த திரைப்படம் ஒட்டுமொத்தமாக 375 கோடி வரை வசூலித்திருப்பதாக கூறுகின்றன. வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் நிற்காது அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..