கடந்த சில ஆண்டுகளாக வரலாற்று கதைகள் படமாக எடுக்கப்படுகின்றன அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க பல வருடங்களாக முயற்சி செய்தார் ஆனால் அதற்கான பணம் அதிகம் என்பதால் எந்த தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை.
கடைசியாக லைகா நிறுவனத்திடம் இந்த கதையை சொல்ல ரொம்ப பிடித்து போகவே உடனே படமாக்கப்பட்டது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. கதையாக படித்தவர்கள் அனைவரும் படமாக பார்த்து கொண்டாடினர்
தொடர்ந்து நல்ல விமர்சனத்தையே பொன்னியின் செல்வன் அனைத்து இடங்களிலும் பெற்றதால் வசூலிலும் அடித்து நொறுக்கியது. ஆம் குறிப்பாக பொன்னியின் செல்வன் முதல் பாகம் திரைப்படம் 500 கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது பாகம் இந்த வருடம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் இந்த திரைப்படமும் நல்ல விமர்சனத்தை பெற்று மிகப் பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் சன் டிவியில் வெகு விரைவிலேயே ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான தேதியையும் தற்போது அறிவித்துள்ளது.
வருகின்ற ஜனவரி 8ஆம் தேதி மாலை 6 மணிக்கு பொன்னியின் செல்வன் முதல் பாகம் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளித்திரையில் எப்படி மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தியது அதேபோல தொலைக்காட்சியிலும் டிஆர்பி யில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.