அண்மை காலமாக சினிமா உலகில் உண்மை மற்றும் நாவலை தழுவி பல படங்கள் வெளி வருகின்றன அந்த படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் ரீதியாக பிரம்மாண்டமான வெற்றியை பெறுகின்றன அந்த வகையில் பாகுபலி, பாகுபலி 2, RRR ஆகிய படங்களை தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்..
இந்த படத்தை மணிரத்தினம் கல்வி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படத்தை எடுத்தார் இந்த படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டார் அதன்படி முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், பிரகாஷ்ராஜ், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, கிஷோர், பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதன் காரணமாக இந்த படம் வசூல் ரீதியாக இன்னமும் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது.
இதுவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 450 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது.
அதன்படி பார்க்கையில் இந்த திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே 212 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்திருக்கிறதாம். வருகின்ற நாட்களில் இந்த படத்தின் வசூல் குறையாது அதிகரிக்கும் என கருதப்படுகிறது இதனால் பொன்னியின் செல்வன் பட குழுவும் சரி, மணிரத்தினமும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.