உலகம் மாறும் போது இயக்குனர்களும் அதற்கு ஏற்றார் போல தன்னை மாற்றிக்கொண்டு நல்ல நல்ல படங்களை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார். இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டு இருந்தார்.
அதில் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸ் ஆனது இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், திரிஷா, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், பிரபு, கிஷோர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.
படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றதால் இந்த படத்தை பார்க்க தற்பொழுது கூட்டம் அதிகரித்த வண்ணமே இருக்கிறது மக்கள் மற்றும் ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்கள் கூட இந்த படத்தை பார்க்க போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். இதனால் இந்த படத்திற்கான மவுசு இப்பொழுது வரையிலும் குறையவே இல்லை
வருகின்ற நாட்களிலும் பல திரையரங்குகளில் டிக்கெட் ஹவுஸ் ஃபுல்லாக இருக்கும் என பேசப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு நாள் முடிவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் எவ்வளவு வசூலித்துள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாவது நாள் முடிவில் 70 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாளில் 80 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் இரண்டாவது நாளில் 70 கோடி என்பதால் ஆக மொத்தம் இரண்டு நாட்களில் மட்டுமே 150 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இரண்டு நாட்களில் இவ்வளவு வசூல் அள்ளியதே கிடையாது என கூறி வருகின்றனர் வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.