தமிழ் சினிமா உலகில் பல சிறந்த இயக்குனர்கள் இருந்தாலும் நாவலை மையமாக வைத்தே படங்களை இயக்கும் இயக்குனர்கள் வெகு சிலரே அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறனுக்கு முன்பு பல நாவல்களை மையமாக வைத்து பல படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் மணிரத்தினம்.
ரஜினி போன்ற டாப் நடிகர்களை வைத்து படம் பண்ணியவர். இப்போதும் கூட பல்வேறு திரைப்படங்களை இயக்கி வெற்றி வெற்றி கண்டுள்ளார். அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை மையாமாக வைத்து பொன்னின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து வருகிறார்.
மணிரத்தினம் இந்த படத்தின் முதல் பாகம் விருவிருப்பாக எடுக்கப்பட்டு ஒரு வழியாக செப்டம்பர் 30 ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், அமிதாப்பச்சன், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பிரகாஷ்ராஜ், திரிஷா மற்றும் டாப் நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
இதுவரை படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிலவற்றை வெளியிட்டு அசத்தி உள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு ஆடியோ ரைட்ஸ் மட்டுமே எதிர்பார்க்காத ஒரு தொகைக்கு விற்று உள்ளதாக கூறப்படுகிறது ஆம் இந்திய அளவில் எந்த ஒரு படமும் ஆடியோ ரைட்ஸ் மட்டும் 20 கோடிக்கு விற்று உள்ளதாம்.
முதல்முறையாக பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆடியோ ரைட்ஸ் மட்டுமே 20 கோடிக்கு உள்ளதால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறாராம்.இதுவரை தமிழ் சினிமாவில ரஜினி, விஜய் படங்கள் கூட இப்படி இரு சாதனை செய்தது இல்லை என்பது குறிப்படத்தக்கது.