இயக்குனர் மணிரத்தினத்தின் புகழ்பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை கல்கியின் நாவலை தழுவி கற்பனையாக உருவாக்கப்பட்டது. மேலும் இந்த திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசை அமைத்து உள்ளார். இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாகம் இன்று உலகம் எங்கும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் ஆன்லைன் டிக்கெட் மட்டுமே 17 கோடி வரை முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான விக்ரம் திரைப்படம் 15 கோடி வரை தான் முன்பதிவில் வசூல் செய்தது ஆனால் அதையும் தாண்டி உள்ளது பொன்னியின் செல்வன்.
இந்நிலையில் வர்த்தக ஆதாரங்கள் தகவலின்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 30 முதல் 35 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பொன்னியின் செல்வன் படம் முதல் நாள் வெளிநாட்டு வசூல் 20 முதல் 40 கோடி வரை தொடும் என கூறப்படுகிறது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் உலக அளவில் 50 முதல் 60 கோடி வரை வசூல் செய்ய வாய்ப்பு உள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் ஜூன் மாதம் வெளியானது இந்தியாவில் 35 கோடியும் உலக அளவில் 54 கோடியையும் வசூலித்தது. இந்த சாதனையை பொன்னியன் செல்வன் திரைப்படம் எளிதாக எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்யும் என இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. விரைவில் முதல் நாள் வசூல் விவரத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.