தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் மணிரத்தினம் இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன மேலும் சமீபத்தில் இவர் இயக்கிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை எடுக்க வேண்டும் என அதிக ஆர்வம் காட்டினார்கள் ஆனால் மணிரத்தினத்தின் மூலம் தான் பொன்னியின் செல்வன் முழுமை அடைந்தது.
இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக மணிரத்தினம் இயக்கியிருந்தார். முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் மாபெரும் வசூல் வேட்டை நடத்தியது இந்த நிலையில் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றி நடை போட்டு வருகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, நாசர் பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. முதல் பாகத்தில் ஸ்கோப் இரண்டாவது பாகத்திலும் இருந்தது.
இந்த திரைப்படத்தில் குந்தவையாக நடிகை திரிஷா நடித்திருந்தார், அப்படி இருக்கும் நிலையில் சிறு வயது குந்தவையாக கதாபாத்திரத்தில் நிலா என்ற சிறுமி நடித்திருந்தார் நிலா பிரபல சீரியல் நடிகர் கவிதா பாரதி மற்றும் நடிகை கன்யா பாரதியின் மகள் தான் இவர் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சிறு வயது குந்தவையாக நடித்த நிலா சிறுமியின் அம்மா ஒரு சீரியல் நடிகை என தற்போது தெரிய வந்துள்ளது.