படம் ஹிட் ஆயிடுச்சுன்னு.. 50 வது நாளில் ஓவராக ஆட்டம் போட்ட பொன்னியின் செல்வன் நடிகர், நடிகைகள் – அதிலேயும் த்ரிஷா வேற லெவல்..

ponniyin selvan

அண்மை காலமாக தென்னிந்திய சினிமா உலகில் வரலாற்று கதை மற்றும் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து பல படங்கள் வெளிவந்துள்ளன அந்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் பல நாவல் மற்றும் உண்மையை சம்பவங்களை மையமாக வைத்து படங்களை இயக்கி வெற்றி கண்டவர் மணிரத்தினம்.

இருப்பினும் பொன்னியின் செல்வன் நாவலை  படமாக எடுக்க ஆசைப்பட்டார் அதை எடுக்க பல தடவை முயற்சித்த மணிரத்தினம் தோற்று தான் போனார். கடைசியாக லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்து அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை ஒரு வழியாக 500 கோடி பட்ஜெட்டில் படமாக எடுத்தார் படம் நீளமாக இருந்ததன் காரணமாக இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார்.

அதன்படி கடந்த செப்டம்பர் 30 -ம் தேதி முதல் பாகம் கோலாகலமாக உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. வரலாற்று கதை என்பதால் மற்ற படங்களை விட வித்தியாசமாக இருந்தது இருப்பினும் மக்களுக்கு இது ஒரு புது அனுபவத்தை கொடுத்தது. படம் சிறப்பாக இருந்ததால் நல்ல விமர்சனத்தை கொடுத்து கொண்டாடினர் அதன் காரணமாக பொன்னியின் செல்வன் முதல் பாகம்  ஒட்டு மொத்தமாக 500 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ் ராஜ், கிஷோர் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் 50 நாட்களைக் தொட்டு இன்னமும் பல திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக போகிறது இப்படி இருக்கின்ற நிலையில் 50 வது நாளை முன்னிட்டு படக்குழுவினர்..

யூனியன் வைத்து கொண்டாடி உள்ளனர் அதில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஷோபிதா போன்றவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் அதுவும் இவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் சற்று வித்தியாசமாக இருந்தது. முதலில் ஐந்து பேரும் கால்களை காட்டி புகைப்படம் எடுத்துக் கொண்டனர் பிறகு போனை கீழே வைத்து ஐந்து பேரும் முகம் தெரியும்படி புகைப்படம் எடுத்துக் கொண்டனர் இந்த புகைப்படங்களை நடிகை சோபிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  பதிவிட்டு உள்ளார் இதோ அந்த வைரல் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..

ponniyin selvan
ponniyin selvan
ponniyin selvan