சமீபகாலமாக இயக்குனர்கள் பலரும் வரலாற்று கதைகளை எடுக்கவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் ஏனென்றால் இது மாதிரியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வரும் என்பதை நன்கு தொடர்ந்து படங்களை எடுக்கின்றனர் அந்த வகையில் இயக்குனர் மணிரத்தினம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க பல தடவை முயற்சித்தார்.
ஆனால் சில பிரச்சனைகள் காரணமாக படம் தொடங்க முடியாமல் மூன்று தடவை தோற்றுப் போனார். நான்காவது முறையாக மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ஆகிய தயாரிப்பு நிறுவனங்களுடன் கைகோர்த்து மிக பிரம்மாண்ட பொருள் செலவில் பொன்னியின் செல்வன் படத்தை உருவாக்கினார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பார்த்திபன்..
மற்றும் சரத்குமார், பிரபு, திரிஷா, விக்ரம், பிரகாஷ்ராஜ், ஜெயராம், கிஷோர், பாபு ஆண்டனி, ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி போன்ற பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது படம் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக இருந்த காரணத்தினால் மக்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார் மேலும் நல்ல விமர்சனத்தை இதுவரையும் கொடுத்துள்ளனர்.
இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் வேட்டை அனைத்து இடங்களிலும் ஜோராக நடத்தியது முதல் நாளில் 80 கோடி வசூல் அள்ளிய பொன்னியின் செல்வன் திரைப்படம் அடுத்த அடுத்த நாட்களிலும் தொடர்ந்து பிரம்மாண்டமான வசூலை அள்ளியது. இப்படி இருக்கின்ற நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி ஏழு நாட்கள் ஆன நிலையில் உலகம் முழுவதும்..
எவ்வளவு வசூல் வேட்டை நடத்தியுள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் இதுவரை மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக 340 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. வருகின்ற நாட்களிலும் எந்த ஒரு பெரிய படமும் இல்லாமல் இருப்பதால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் வேட்டை தொடரும் என தெரிய வருகிறது.