கல்லாப்பெட்டியை நிரப்பும் பொன்னியின் செல்வன் – 4 நாட்கள் முடிவில் மட்டுமே இத்தனை கோடியா.?

ponniyin selvan
ponniyin selvan

சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் அந்த வகையில் மணிரத்தினத்திற்கு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை எடுக்க வேண்டும் என்கின்ற ஆசை பல வருடங்களுக்கு முன்பே உருவானது. அப்பொழுது எடுக்க முடியவில்லை என்றாலும் தொடர்ந்து போராடிக் கொண்டுதான் இருந்தார்.

ஒரு வழியாக மிகப்பெரிய ஒரு திட்டத்தை தீட்டி பொன்னியின் செல்வன் படத்தை 500 கோடி பட்ஜெட்டில் எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், திரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், சாரா அர்ஜுன், பார்த்திபன், ஜெயசித்ரா, அஸ்வின், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், கிஷோர், ரகுமான், பாபு ஆண்டனி, மோகன் ராமன், நாசர், லால், நிழல்கள் ரவி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக உலகம் முழுவதும் ரிலீசானது. இந்த படம் எப்படி இருக்கும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில்  அனைவரது ஆசையையும் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக இருந்ததால் மக்கள் மற்றும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருவதோடு நல்ல விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர் அதன் விளைவாக தற்போது வசூலிலும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது.

முதல் நாளில் 80 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அடுத்தடுத்த நாட்களில் இன்னும் இந்த படத்தின் வசூல் உயர்ந்து கொண்டே போனதால் தற்போது பட குழு செம சந்தோஷத்தில் இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து இத்துடன் நான்கு நாட்களாகின்றன இதுவரை எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி பார்க்கையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் நான்கு நாட்கள் முடிவில் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன வருகின்ற நாட்களிலும் விடுமுறை நாட்கள் என்பதால் இந்த படத்தின் வசூல் அதிகரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம் இப்பொழுது மட்டுமே பல்வேறு சாதனைகளை பொன்னியின் செல்வன் திரைப்படம் நிகழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.