பொன்னியின் செல்வன் 2 முழு திரைவிமர்சனம் இதோ.!

ponniyin selvan 2 review
ponniyin selvan 2 review

அமரர் கல்கி எழுதிய அற்புதமான நாவலை பலரும் படமாக்க முயற்சி செய்தார்கள் ஆனால் முடியவில்லை. இயக்குனர் மணிரத்தினம் தன்னுடைய விடா முயற்சியால் இரண்டு பாகங்களாக எடுத்து சாதித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்துள்ளார். பல வருடங்களாக புத்தகத்தில் படித்த ஆதித்ய கரிகாலன் அருள்மொழிவர்மன், வந்திய தேவன், நந்தினி குந்தவை, சுந்தரச் சோழன், பூங்குழலி, வானதி, பிரம்ம ராயர், ரவி தாசன் ஊமை ராணி என அனைத்து கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுத்து நடிகர்களை கச்சிதமாக தேர்வு செய்து முதல் பாகத்தை வெளியிட்டு மாபெரும் வசூல் வேட்டை நடத்திய மணிரத்தினம் அதன் இரண்டாவது பாகத்தையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்தாரா என்பதை இங்கே காணலாம்.

படத்தின் கதை

அருள்மொழி வருமானம், வந்திய தேவனும் கடலில் விழுந்து இறந்து போனதாக தஞ்சைக்கு தகவல் கிடைக்கிறது. இந்த நிலையில் சுந்தர சோழர் குந்தவை என அனைவரும் மனம் உடைந்து ஆதித்ய கரிகாலனுக்கு செய்திகளை அனுப்பி வைக்கிறார்கள். இந்த செய்தி தெரிந்ததும் தன்னுடைய தம்பி மரணத்திற்கு நந்தினி தான் காரணம் என நந்தினியை கொள்வதற்காக படையோடு கிளம்பி தஞ்சைக்கு வருகிறார்.

கடலில் விழுந்த வாத்திய தேவனையும் அருள்மொழி வருமனையும் மந்தாகினி என்னும் ஊமை ராணி காப்பாற்றி விடுகிறார். மற்றொரு பக்கம் மதுராந்தகம் மணிமகுடம் தனக்கு வர வேண்டும் என பல சூழ்ச்சிகளை செய்ய ஆரம்பிக்க மறுமுனையில் அமர புஜங்காவிற்க்காக தன்னுடைய முன்னாள் காதலன் ஆதித்ய கரிகாலனை கொள்வதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார் நந்தினி.

வந்திய தேவன் குந்தவையின் காதல் என்ன தான் ஆனது அருள் மொழி வர்மனை திருமணம் செய்து கொண்டாரா வானதி ஆதித்ய கரிகாலனை கொன்றாரா நந்தினி.? மணி மகுடம் யாருக்கு சென்றது என பல டீவிஸ்ட் களுடன் கொடுத்துள்ளார் மணிரத்தினம்.

இடியாப்ப சிக்கல் கொண்ட அரசியல் சூழ்ச்சி கதையை நிஜ வரலாற்றுகளுடன் ஒன்றி போகும்படி அமரர் கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் கதையை படமாக்க வேண்டுமென்ற பெரிய சுமையை தனது தலையில் சுமந்து கொண்ட இயக்குனர் மணிரத்தினம் மற்றும் எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் இணைந்து பிரம்மாண்ட கதையை இரண்டு பாகங்களாக சுருக்கி சுவையாக ரசிகர்களுக்குகொடுத்துள்ளார்கள்.

பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை ராஜமவுலி மேக்கிங் உடன் மணிரத்தினத்தை ஒப்பிட முடியாது ஒப்பிடவும் தேவையில்லை எடுத்துக் கொண்ட வரலாற்று நாவலுக்கு எந்த அளவு தனது இயக்கத்தின் மூலம் உயிர் கொடுக்க முடியுமோ அந்த அளவு கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். பொன்னியின் செல்வன் கதையும் மகாபாரதம் போன்றுதான் டிவி சீரியல் ஆக எடுத்தாலும் அல்லது அனிமேஷன் படமாக எடுத்தாலும் அடுத்தடுத்த தொழில் நுட்பத்தை வைத்து மிகவும் பிரம்மாண்டமாக எடுத்துக் கொண்டே போகலாம்.

மிகவும் விரைவாக மிகவும் ஸ்மார்ட் ஆக இந்த திரைப்படத்தை மணிரத்தினம் கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. ஆதித்ய கரிகாலன் என்று சொல்லிவிட்டு அதற்கான கம்பீரமும் வீரமும் இல்லை என்றால் ரசிகர்கள் சிரித்து விடுவார்கள், அந்த அளவு விக்ரம் தன்னுடைய முழு பங்களிப்பை இந்த திரைப்படத்திற்காக கொடுத்துள்ளார். அதேபோல் நந்தினி என்று சொல்லிவிட்டு அதற்கான அழகும் சூழ்ச்சியும் இல்லை என்றால் யார் ஏற்றுக் கொள்வார்கள் ஆனால் ஐஸ்வர்யா ராய் தன்னுடைய கண்ணால் மிரட்டி வில்லத்தனத்தை  காட்டி உள்ளார்.

நந்தினி என்ற கதாபாத்திரத்திற்கு முழுக்க முழுக்க அழகு முக்கியம் என்பதை ஐஸ்வர்யாவை பார்த்தாலே தெரிந்து விடும் அதேபோல் வந்திய தேவனாக நடித்துள்ள கார்த்தி வால் சேட்டை கொண்ட வல்லவனாக நடித்திருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதேபோல் அருள்மொழி வர்மன் அழகும் நிதானமும் தொலைநோக்கு பார்வையும் கொண்ட அதிபுத்திசாலியாக இருக்க வேண்டும் அதனை கனகச்சிதமாக நடித்துள்ளார் ஜெயம் ரவி.

குந்தவை ஒரு பெண்ணாக இருந்தாலும் அரசனுக்கு உண்டான அறிவை கொண்டு இருக்க வேண்டும் இந்த கதாபாத்திரத்தில் திரிஷாவை நடிக்க வைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் இயக்குனர் மணிரத்தினம் அந்த வகையில் சீயான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி திரிஷா என ஒவ்வொரு நடிகர்களுக்கும் தேவையான கதாபாத்திரத்தை கொடுத்து அவர்களை சிறப்பாக இயக்கியுள்ளார் மணிரத்தினம்.

சோழ தேசத்திற்கு நம்மளை கொண்டு சென்ற ரவிவர்மனின் ஒளிப்பதிவு பின்னணி இசையில் பிரம்மிக்க வைத்த ஏ ஆர் ரகுமானின் இசை, ஸ்ரீதர் பிரசாந்தின் எடிட்டிங் தோட்டா தரணியின் பிரம்மாண்ட செட்டு இளங்கோ கிருஷ்ணனின் பாடல் வரிகள் என தொழில்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரும் இந்த வரலாற்று பாடத்திற்காக உழைத்து இருப்பது படத்தைப் பார்த்தாலே தெரியும்.

கிளைமாக்ஸ் காட்சியில் சீயான் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஸ்கோர் செய்துவிட பொன்னியின் செல்வன் டைட்டில் ரோலில் நடித்துள்ள ஜெயம் ரவி கிளைமாக்ஸ் இல் அந்த மணி மகுடத்தை வைத்து செய்யும் வேலைக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அருள் அருள்மொழி வர்மனாக இருந்த ராஜராஜ சோழனாக மாறும்பொழுது ஜெயம் ரவி வானதி நடந்து வரும் அழகில் ராஜ கலை தெரிகிறது.

முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு மணிரத்தினம் மெனக்கட்டுள்ளது இந்த திரைப்படத்தில் நன்றாகவே தெரிகிறது. ஆதித்ய கரிகாலனாகவும் ஐஸ்வர்யா ராய் டபுள் ரோல் என இருவரும் மொத்த திரைப்படத்தையும் தாங்கி நிற்கிறார்கள். என்னதான் கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என அனைத்தும் சரியாக அமர்ந்து இருந்தாலும் விக்ரம் ஐஸ்வர்யா தான் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்கள்.

மணிரத்தினம் தனக்கு ஏற்றவாறு நாவலில் சில இடங்களில் மாற்றி அமைத்துள்ளார் இதனை பொன்னியின் செல்வன் நாவலை படித்த பலருக்கும் ஒரு குறையாக தான் தெரியும். ஆனாலும் பொன்னியின் செல்வன் 2  படத்தைப் பார்த்தவர்களுக்கு முழு திருப்தி கிடைத்திருக்கும்.