மணிரத்தினம் தனது திரை பயணத்தில் எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார் ஆனால் அவர் எடுக்க விரும்பியது பொன்னியின் செல்வன் படம் தான் இதற்காக பல தடவை முயற்சித்து தோல்வியை தழுவிய அவர் கடைசியாக லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய நிறுவனங்களுடன் கைகோர்த்து ஒரு வழியாக பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுத்தார்..
படம் நீளமாக இருந்த காரணத்தினால் இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிடப்பட்டது அதன்படி முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் சில மாதங்கள் கழித்து ஏப்ரல் 28ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.
முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் எமோஷனல் ஆக்சன் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகின்றன. அதன் காரணமாக இந்த படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே சுமார் 40 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழை தாண்டி பழமொழிகளில் வெளியாகி உள்ளது அதன்படி தெலுங்கிலும் பொன்னியின் செல்வன் படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. அங்கு இதுவரை மட்டும் 5.75 கோடி வசூலி தெரிந்தாலும் இதிலிருந்து ஷேர் இதுவரை 2.75 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. தெலுங்கில் இந்த படம் சுமார் 10 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது..
இன்னும் தெலுங்கில் இந்த திரைப்படம் 7.5 கோடி ஷேர் வந்தால் மட்டுமே பொன்னியின் செல்வன் திரைப்படம் தெலுங்கில் வெற்றி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. பொன்னியின் செல்வன் திரைப்படம் நிச்சயம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெறும் என அங்கு கூறப்படுகிறது வசூல் நிலவரம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் போட்ட காசை விட அங்கு அதிக வசூல் அள்ளுவது நிச்சயம் என கிசுகிசுக்கப்படுகிறது.