பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பல இயக்குனர்கள் எடுக்க ஆசைப்பட்டார்கள் ஆனால் மணிரத்தினத்தின் கைவண்ணத்தில் தான் பொன்னியின் செல்வன் திரைப்படம் சாத்தியமானது. இந்த திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாக்கியது. முதல் பாகம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் 500 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை மணிரத்தினம் இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. அதேபோல் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது.
கடந்த வாரமே பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முன் பதிவு தொடங்கிய நிலையில் இன்று திரையரங்கம் முழுவதும் ரசிகர்களின் ஆரவாரத்தால் குடும்பத்துடன் படத்தை கண்டு களித்து வருகிறார்கள். அதேபோல் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களும் கிடைத்து வருகிறது. அதேபோல் படத்தின் விமர்சனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் அதிகரிக்க செய்தது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு சிறப்பு காட்சிகள் மட்டும் அனுமதி கிடைக்கவில்லை இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று தமிழகத்தில் ஒன்பது மணி காட்சி தான் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் குவிந்ததால் திரையரங்குகள் திருவிழா போல் காட்சியளித்தது.
அப்படி இருக்கும் நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டாவது பாகம் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையதளத்திலும் லீக் ஆகியது. இந்த திரைப்படத்தின் லிங்க் டெலெக்ராம் போன்ற சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதைப் பார்த்த பட குழு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளது. யார் பார்த்த வேலைடா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.