பொன்னியின் செல்வன் 2 படு தோல்வியா..? முதல் விமர்சனம் கொடுத்த பிரபலம் .!

ponniyin selvan 2
ponniyin selvan 2

மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்தப் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளத்தில் நடித்திருந்த நிலையில் பல கோடி பட்ஜெட்டில் உருவானது. இவ்வாறு இந்த படம் வெளியாகி எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியினை கண்ட நிலையில் வசூலில் ரூபாய் 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இவ்வாறு வசூலை குவித்த இந்த படத்தின் இரண்டாவது பாகம் வருகின்ற 28ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர். இந்நிலையில் தற்பொழுது இந்தப் படத்தின் மொத்த படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் படக்குழுவினர்கள் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் இந்த படத்தின் வியாபாரமும் நடந்து வரும் நிலையில் பொன்னியின் செல்வன் படத்தினை வெளிநாட்டில் சென்சார் குழு பார்த்துவிட்டதாக திரைப்பட விமர்சகர்மான உமைர் சந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது பொன்னியின் செல்வன் 2 கண்டிப்பாக படுதோல்வி அடையும் என்று கூறியுள்ளார். ஆனால் இதுவரை வெளிநாட்டு சென்சார் குழுவினரிடம் படம் போகவில்லை என்றும் அதற்குள் எப்படி இவர் மட்டும் பார்த்துவிட்டு விமர்சனம் செய்துள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இவ்வாறு பொன்னியின் செல்வன் படத்தின் மீதும் மோசமான விமர்சனம் தந்து வரும் உமைர் சந்துவின் மீது கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என கூறி வருகிறார். இவ்வாறு முதன்முறையாக இவர் பொய்யான விமர்சனம் தந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இவர் மட்டுமல்லாமல் பலரும் விமர்சனம் செய்து வருவதனை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இவ்வாறு இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பல கோடி பட்ஜெட்டில் படங்களை உருவாக்கி வரும் நிலையில் இவர்கள் இவரைப் போன்ற விமர்சகர்கள் நெகட்டிவான விமர்சனங்களை தந்து வருவது ரசிகர்கள் மத்தியில் கடுப்பினை ஏற்படுத்தி உள்ளது.