இன்று உலகம் முழுவதும் 3200 திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் ஒளிபரப்பப்பட்டுள்ளது இதில் பல இடங்களில் அதிகாலை சிறப்பு காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்குவதற்கு பல இயக்குனர்கள் முயற்சி செய்தார்கள். மணிரத்தினத்தின் மூலம் தான் அந்த முயற்சி திரைப்படமாக உருவானது. நாவலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக மணிரத்தினம் இயக்கியுள்ளார்.
முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் இரண்டாவது பாகம் இன்று மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. இரண்டாவது பாகத்திலும் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி சோபிதா துளிபாலா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்துள்ளார்.
இரண்டாவது பாகத்தில் பாடல்களும் தீம் மியூசிக் பேக்ரவுண்ட் மியூசிக் என பட்டையை கிளப்பியுள்ளார். மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தை 4*டி வடிவத்தில் திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளது இந்த முறையில் ஒளிபரப்பப்படும் முதல் திரைப்படம் பொன்னியின் செல்வன். அப்படி இருக்கும் வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் ஏப்ரல் 28 இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
முன்பதிவில் பட்டய கிளப்பிய பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் 30 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனை பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கணித்துள்ளார்கள். அதேபோல் 2022 ஆம் ஆண்டு வெளியாகிய முதல் பாகம் பொன்னியின் செல்வன் முதல் நாளில் 80 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த இரண்டாவது பாகத்தில் ஆதித்ய கரிகாலனின் ஆட்டம் அதிகமாக இருப்பதாகவும். பார்வையாலேயே வில்லியாக மிரட்டியுள்ளார் ஐஸ்வர்யாராய் எனவும் படத்தைப் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நாவலால் ஈர்க்கப்பட்டு வரலாற்று நாடகம் சோழர்களின் நிஜ வாழ்க்கையை இந்த திரைப்படம் விளக்குகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் இரண்டாவது பாகம் அமைந்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.