ஆரம்பமே அட்டகாசம் செய்யும் பொன்னியின் செல்வன் 2.! லைக்கா நிறுவனம் வெளியிட்டஅதிரடியான வசூல் நிலவரம் இதோ.!

ponniyin selvan2 collection
ponniyin selvan2 collection

இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தை மணிரத்தினம் இரண்டு பாகங்களாக இயக்கியுள்ளார். முதல் பாகம் 2022 ஆம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக 500 கோடிக்கு மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில்  கெத்து காட்டியது.

எழுத்தாளர் கல்கி அவர்களின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் நாவலை பலரும் திரைப்படமாக எடுக்க முயற்சி செய்தார்கள், ஆனால் மணிரத்தினத்தின் மூலம் தான் அது  சாத்தியமானது. இந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரோடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மற்றும் இளங்கோ குமரவேல், மணிரத்தினம் ஆகியோர்கள் இணைந்து திரைக்கதை வசனம் பணியாற்றினார்கள் முன்னணி கலை இயக்குனரான தோட்டா தரணி அவர்களின் கலை இயக்கத்தில், ரவிவர்மாவின் ஒளிப்பதிவில், ஸ்ரீதர் பிரசாந்தின் படத்தொகுப்பில், பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார்.

மக்களின் மனம் கவர்ந்த பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களான ஆதித்ய கரிகாலன், பொன்னியின் செல்வன் என்கின்ற அருள்மொழி வர்மன், வல்லவராயன் வந்திய தேவன், நந்தினி, ஊமை ராணி ,குந்தவை ஆழ்வார்கடியன் நம்பி, பூங்குழலி, பெரிய பழுவேட்டையர், பூதி விக்ரம், சேந்தன், அமுதன்,  ரவி தாசன், திருக்கோவிலூர் மலையம்மன், செம்பியன் மாதவி, அனிருத் பிரம்ம ராயர், வீரபாண்டியன் ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், விக்ரம் பிரபு, இளைய திலகம் பிரபு, சோபிதா, நாசர், ரகுமான், அஸ்வின், கிஷோர் லால் ஜெயசித்ரா, மோகன் ராமன், என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்தையும் திரையில் வெளியிட்டுள்ளார்கள் இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வருட கோடை விடுமுறையை கொண்டாடும் வகையில் பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் உலகம் முழுவதும் பலமொழிகளில் வெளியாகி உள்ளது.

பிரம்மாண்டத்தின் உச்சமாக வெளியாகி உள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கி விட்டார்கள் அதேபோல் வசூல் வேட்டையும் ஆரம்பத்திலேயே அமர்க்களமாக தொடங்கியுள்ளது அந்த வகையில் அமெரிக்காவில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் முன்பதிவு மட்டும் 5 லட்சம் டாலர்களைக் கடந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் கிடைத்துள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நல்ல வசூலை பெற்றுள்ளதால் படம் ரிலீஸ் ஆகி தற்போது நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது அதனால் இன்னும் வசூல் அதிகரிக்கும் இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு தகவல்.