பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு முடிந்த கையோடு சூட்டோடு சூடாக டப்பிங் பணியில் முதலில் இறங்கிய பிரபல நடிகை..!

ponniyin-selvan
ponniyin-selvan

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் இத்திரைப்படம் ஆனது மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இத்திரைப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், திரிஷா, ரியாஸ்கான், பிரபு, ஜெயராம் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இவ்வாறு உருவாகும் இத் திரைப்படமானது இரண்டு பாகங்களாக வெளியாக இருந்த நிலையில் லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் வழங்க மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இவ்வாறு உருவாகும் இத்திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக பணியாற்றி வருபவர் தான் ஏ ஆர் ரகுமான். மேலும் ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் அவர்கள் பணியாற்ற உள்ளார். இவ்வாறு வெளிவந்த தகவலின்படி இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுந்துள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாக படக்குழுவினர்கள் ஒரு போஸ்டர் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்கள்.

இதனை இந்த திரைப்படத்தில் நடித்த பல்வேறு நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அதனை உறுதிப்படுத்தியும் உள்ளார்கள். இவ்வாறு இத்திரைப்படத்தின் காட்சிகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் பணி தொடங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது நடிகை திரிஷா அவர்கள் பெயர் செந்தமிழ் என்ற கேப்ஷன் உடன் டப்பிங் கொடுத்துவரும் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வெளியாகியுள்ளது.

trisha-1
trisha-1