சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தினை பற்றிய ஏராளமான தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் தற்போது அஜித்தின் வலிமை மற்றும் விஜயின் பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் முதல் நாள் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் படத்தால் முறியடிக்க முடியவில்லை என்றும் ஆனால் வெளிநாட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். வெளியான முதல் நாள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் வசூல் ரீதியாக பல இடங்களில் சாதனை படைத்தது அந்த வகையில் முதல் நாளில் மட்டும் ரூபாய் 80 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையை படைத்துள்ளது. மேலும் இதுவரையிலும் எந்த ஒரு தமிழ் படமும் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் முதல் நாளில் இந்த படத்தால் பெரிதாக வசூல் கிடைக்கவில்லை தமிழகத்தில் பொன்னியின் செல்வன் படம் முதல் நாளில் ரூபாய் 27 கோடி மட்டுமே வசூல் செய்து இருக்கிறது இதனால் விஜயின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை படங்கள் முதல் இரண்டு இடங்களை தக்க வைத்து உள்ளன.
ஆனால் வெளிநாட்டில் பொன்னியின் செல்வன் படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை பெற்று வருகிறது அந்த வகையில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் விக்ரம் படம் இருந்து வந்த நிலையில் அந்த படத்தின் சாதனையை இரண்டே நாளில் முறியடித்து இருக்கிறது பொன்னியின் செல்வன்.
குறிப்பாக அமெரிக்காவில் இந்த படம் 3.25 மில்லியன் டாலருக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதேபோல் இங்கிலாந்தில் 5 லட்சத்து 24 ஆயிரம் பவுண்ட் வசூலித்து அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது பொன்னியின் செல்வன் முதல் இடத்தில் ரஜினியின் 2.0 பட சாதனையை நாளைக்கு முறியடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.