தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன். இவர்கள் தற்போது கார்த்தி அவர்கள் சர்தார் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து முடித்த கார்த்தி அடுத்ததாக சர்தார் திரைப்படத்தில் நடித்த திரைப்படம் சர்தார் இந்த திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
அதே சமயத்தில் நேற்று வெளியான சிவகார்த்திகேயனின் படமான பிரின்ஸ் திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது. பொதுவாகவே நடிகர் சிவகார்த்திகேயனின் படம் என்றால் அது நகைச்சுவை படமாக இருக்கும் அதிலும் இந்த படம் ஓவர் நகைச்சுவையால் எடுக்கப்பட்டதால் ஊத்தி முழுவியது.
இந்த நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வரையிலும் திரையரங்கில் கூட்டம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் தீபாவளியை முன்னிட்டு இரண்டு முன்னணி நடிகர்களின் படங்களான சர்தார் மற்றும் பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியாக நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் நிக்காமல் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது அதிலும் குறிப்பாக நேற்று மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழகத்தில் 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருந்தது. இந்த திரைப்படம் ஒரு வரலாற்று சார்ந்த திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பேராதரவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாமல் பொன்னின் செல்வன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி தற்போது வரையிலும் திரையரங்கில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.