கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகிய திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தை மணிரத்தினம் அவர்கள் தான் இயக்கி இருந்தார் கல்கி இந்த திரைப்படத்தின் கதையை எழுதினார். மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
மிகப்பெரிய பொருட்செலவில் லைக் ஆன நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது இந்த திரைப்படத்தை ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். தமிழகத்தில் இந்த திரைப்படம் 168 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் வசூலில் முன்னிலையில் இருந்த விசுவாசம், பாகுபலி, ஆகிய திரைப்படத்தின் வசூல் சாதனையை தமிழகத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் முறியடித்துள்ளது இரண்டாவது இடத்தில் 168 கோடி வசூலித்து நிலைத்து நிற்கிறது. முதலிடத்தில் 190 கோடி வசூலித்து நிலைத்து இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் வசூலை இன்னும் ஒரு சில நாட்களில் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த பொன்னியின் செல்வன் திரைப்படம் இதுவரை உலக அளவில் 395 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது கிட்டத்தட்ட 400 கோடி நெருங்கி விட்ட நிலையில் விரைவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் 500 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக ஒருவர் திரைப்படம் வெற்றி திரைப்படம் என்பது படத்தின் வசூலை வைத்து கணிக்கப்படுகிறது அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வசூலிலும் நல்ல வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக பல திரைப்படங்கள் அமைந்துள்ளது அந்த லிஸ்டில் பொன்னியின் செல்வன் திரைப்படமும் தற்பொழுது இணைந்துள்ளது உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி உள்ள பொன்னியின் செல்வம் விரைவில் 500 கோடி வசூலித்து ஒட்டுமொத்த தமிழ் திரைப்படத்தையும் ஓரங்கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.