திரையரங்கில் குறையாத கூட்டம் பொன்னியின் செல்வன் தமிழகத்தில் செய்த மாபெரும் வசூல் சாதனை.?

ponniyin-selvan
ponniyin-selvan

தமிழ் சினிமாவில்  மக்களால் அதிகமாக ரசிக்கப்பட்டு பார்க்கப்படும் திரைப்படங்களை வசூலை வைத்து வெற்றி பெற்றுள்ளதா என்பதை கணித்து வருகிறார்கள் பலரும் அந்த வகையில் பாக்ஸ் ஆபிஸ் இந்த விவரத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஒவ்வொரு புது திரைப்படம் வெளியாகும் பொழுது இந்த திரைப்படம் பழைய திரைப்படங்களின் வசூலை முறியடித்ததா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

அப்படித்தான் தமிழ் சினிமாவில் கல்கி என்ற எழுத்தாளர்கள் எழுதப்பட்டு ஒட்டுமொத்த ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய்,  திரிஷா, விக்ரம் பிரபு, கார்த்தி, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். முதலில் பொன்னியின் செல்வன் கதையை பழைய இயக்குனர்கள் இயக்க ஆசைப்பட்டார்கள் ஆனால் அவர்களால் எடுக்க முடியவில்லை.

கடைசியில் மணிரத்தினத்தினால் அது சாத்தியமானது இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்து இன்று வரை திரையரங்குகளில் கூட்டம் அலைமோதி வருகிறது பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த பலரும் புத்தகத்தில் படித்ததை திரையில் பார்க்க அவ்வளவு அழகாக இருந்ததாக பலரும் கருத்து தெரிவித்தார்கள். அதேபோல் ஒவ்வொரு நாளும் வசூலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இதுவரை பொன்னியின் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது அது மட்டும் இல்லாமல் தமிழகத்தில் பாகுபலி மற்றும் விசுவாசம் திரைப்படத்தின் வசூல் சாதனையை அசால்டாக முறியடித்து தற்பொழுது 168 கோடி வரை வசூலித்து இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியாகிய விக்ரம் திரைப்படம் 190 கோடி வரை வசூலித்து முதல் இடத்தில் தக்க வைத்துள்ளது இந்த சாதனையை பொன்னியின் செல்வன் திரைப்படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.