தமிழக பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய பொன்னியின் செல்வன்.! எவ்வளவு வசூல் தெரியுமா.?

ponniyin-selvan-
ponniyin-selvan-

மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து தமிழ் படங்களில் முதல் இடத்தினை பிடித்து பெருமையை பெற்றுள்ளது. அதாவது கல்கி எழுதிய வரலாறு நாவலான பொன்னியின் செல்வன் முதல் பாகம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் இதனை தொடர்ந்து பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகத்தினை இயக்குனர் மணிரத்தினம் உருவாக்க இருக்கிறார். அந்த வகையில் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று வெளியான பொன்னியின் செல்வன் முதல் பகுதி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது எனவே இந்த படத்தின் இரண்டாவது பாகத்தையும் தற்போது இயக்க முடிவு செய்துள்ளார்கள்.

இந்த படத்தில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம், ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, வந்திய தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். இவர்களுடைய ஒவ்வொரு கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலையும் வாரி குவித்தது.

அந்த வகையில் தமிழக பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் ஒன்னு பெற்றுள்ளது இந்த படம் உலகம் முழுவதும் 460 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது வார இறுதியில் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் இந்த படம் 56 மில்லியன் டாலர் (461 கோடி) வசூல் செய்துள்ளது இவ்வாறு இந்த படத்திற்கு முன்பு நடிகர் ரஜினியின் 2.0 முன்னணி வகித்து வந்த நிலையில் தற்பொழுது ஒட்டுமொத்த திரைப்படங்களையும் ஓவர்டாக் செய்துள்ளது பொன்னியின் செல்வன்.

இவ்வாறு பொன்னியின் செல்வன் முதல் பாகமே இந்த அளவிற்கு வெற்றி பெற்றுள்ள நிலையில் இதனுடைய இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வருகிறார்கள் இது குறித்த அதிகாரப்பூர்வமான அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.